பண்டிகைக்காலத்தில் விருப்பத்துக்குரிய பரிசுகளைக் கொண்டு வரும் VIVO : Y மற்றும் V தொடர்

புத்தாக்கத்தினை மையக்கருவாகக் கொண்ட நிறுவனமாக  அறியப்படும் முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, அதன் சக்திவாய்ந்த கெமராக்கள், புதுமையான அம்சங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்புகள் காரணமாக இலங்கையில் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமமாகவும் திகழ்கின்றது.  இந்த பண்டிகை காலத்தில், Y20 தொடர் (Y20, Y20s), Y51 மற்றும் V20 (V20 மற்றும் V20 SE) போன்ற மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மூலம் vivo தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது ஷொப்பிங் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து vivo ஸ்மார்ட்போன்களும் இளம், வளர்ந்த, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் நவநாகரிகம் மீது அக்கறை கொண்ட நுகர்வோரின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவையாக மூலோபாய ரீதியாக உருவாக்கப்பட்டுள்ளன.

பண்டிகை கால பிரசாரம் குறித்து vivo Sri Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் கருத்து தெரிவிக்கையில்,” புதிய மற்றும் புத்தாக்கம் மிகுந்த ஸ்மார்ட்போன்களுடன் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை வளமாக்குவதற்கு பெறுமதியை சேர்ப்பதற்கும் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஆதரவை வழங்குவதற்கும் vivo நம்பிக்கை கொண்டுள்ளது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விவோவுடன் கொண்டாட ஒரு வாய்ப்பை வழங்குவதிலும், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது Y தொடர் மற்றும் V தொடர்களிலிருந்து  vivo வின் புத்தாக்க ஸ்மார்ட்போன்கள் மூலம் புதிய தொடக்கங்களைக் குறிக்கும் வாய்ப்பைப் பெறுவதிலும் நாங்கள் உற்சாகமடைகின்றோம். தொழில்நுட்ப மேம்பாட்டு செயல்பாட்டில் புதிய வரையறைகளை அமைப்பதில் vivo அயராது உழைத்து வருவதுடன், இலங்கையில் உள்ள எங்கள் பாவனையாளர்களுக்கு எல்லையற்ற சாத்தியங்களைத் தொடர்ந்து திறக்கும்,” என்றார்.

Y20 தொடர்

vivo அதன் இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட Y20  தொடரை, இளம் பாவனையாளர்களுக்கு பட்ஜெட்டில் முழுமையான அனுபவத்தை வழங்கும் பொருட்டு வெளியிட்டுள்ளது. Y20 தொடர் AI சக்தி சேமிப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய சக்திவாய்ந்த 5000mAh பற்றரியுடன் வருகிறது. பாவனையாளர்கள் தெளிவான காட்சிகளைப் படம்பிடிக்க வேண்டிய தேவைகளையும் இந்தத் தொடர் கருத்தில் கொண்டுள்ளமையால், ஒவ்வொரு ஷொட்டிலும் ஒவ்வொரு சிக்கலான விவரங்களையும் படமெடுக்கும்  PDAF தொழில்நுட்பத்துடன் AI Triple macro கெமராவுடன் வருகிறது. மேம்பட்ட புகைப்பட அனுபவத்திற்காக Face Beauty, Portrait Light Effects மற்றும் Filters உள்ளிட்ட பிற அற்புதமான அம்சங்களை இந்த கெமரா கொண்டுள்ளது. இதன் நவநாகரீக வடிவமைப்பு உடனடியாக unlocking செய்வதற்கு ஏற்ப புத்திசாலித்தனமாக பொருத்தப்பட்ட Side-Mounted கைரேகை ஸ்கேனரையும் கொண்டுள்ளது. 6.51-inch Halo FullView திரையுடன் வரும் Y20, கண்கள் களைப்படுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுள்ள கண் பாதுகாப்பு பயன்முறையானது நீண்ட நேரம் திரையை பார்வையிட ஏதுவாகவுள்ளது.  வெவ்வாறு கவர்ச்சிகர நிறங்களில் 3GB/4GB/8GB RAM +64GB/128GB ROM வகைகளில் பல்துறை பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் இது கிடைக்கின்றது.

Y51

Y51 என்பது Y தொடரில் அண்மையில் இணைந்து கொண்ட நடுத்தர ஸ்மார்ட்போனாகும். இது 5000mAh battery + 18W Fast Charge, 8GB RAM + 128GB ROM powered by Qualcomm® Snapdragon™ 6 Series Mobile Platform மூலம் இயங்கும் சக்திவாய்ந்த மற்றும் நீண்ட கால செயல்திறனைக் கொண்டதாகும். தெளிவான மற்றும் உயர்தர காட்சிகளைப் படம்பிடிக்க Y51, 48MP பின்புற கெமராவைக் கொண்டுள்ளது. உள்ளமைக்கப்பட்ட பல படப்பிடிப்பு முறைகள், AI triple கெமரா, Super Wide-Angle கெமரா, Super Macro கெமரா மற்றும் சூப்பர் நைட் பயன்முறை ஆகியவை நுகர்வோருக்கு குறைந்த வெளிச்ச நிலையில் கூட கூர்மையான படங்களை கிளிக் செய்ய உதவுகின்றன. இது நான்கு தொகுதி Stylish Night Filters உடன் வருவதுடன், நிபுணத்துவம் மிக்க படம்பிடிப்புக்காக தொழில்முறை புகைப்படக்காரர்களால் vivoவிற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புற கெமரா Electronic Image Stabilization (EIS) தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது ஓடும் போதோ, சைக்கிளில் செல்லும் போது கூடவோ பாவனையாளர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், செல்லப்பிராணிகள் மற்றும் தொலைதூர நிலப்பரப்புகளின் அதி-நிலையான வீடியோக்களை எடுக்க அனுமதிக்கிறது.

V20 தொடர்

V20 தொடர் ஒரு அதிநவீன நேர்த்தியான dual tone வடிவமைப்பில் புதுமையான செல்பி திறன்களை வழங்குவதுடன், பாவனையாளர்கள் தங்கள் வாழ்க்கையில் சரியான தருணங்களை சிரமமின்றி பதிவுசெய்ய அனுமதிக்கிறது. இது 33W Flash charge திறனுடன், V20 இன் முன்னணி 44MP Eye Autofocus முன் கெமரா பாவனையாளர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் புதிய செல்ஃபி திறன்களை பயன்படுத்த அனுமதிக்கிறது. இதன் லென்ஸில் Eye Autofocus (AF) இடம்பெறுவதுடன், இது மேம்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி நகரும் செல்ஃபி பொருள்களைக் கண்காணிக்கவும் கவனம் செலுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது. இதுமட்டுமன்றி vlogs போன்றவற்றுக்கு ஏதுவாகவும் இதன் கமெரா அமைந்துள்ளது. இந்த சாதனம் பலவிதமான சுவாரஸ்யமான ஸ்டிக்கர்கள் மற்றும் சிறப்பு விளைவுகள், அத்துடன் வசதியான புகைப்படம் மற்றும் குறுகிய வீடியோ தயாரிப்பு மற்றும் பகிர்வு ஆகியவற்றை வழங்குகிறது. வேடிக்கையான செல்பி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூகத்துடன் இணைந்திருக்கும் நுகர்வோர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

இந்த பிரசாரம் மற்றும் பண்டிகை டீல்கள் மற்றும் வண்ணங்கள் மற்றும் பிற அம்சங்கள் பற்றிய மேலதிக தகவலுக்கு, தயவுசெய்து விவோ இலங்கையின் வின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.vivo.com/lk  அல்லது உள்நுழைந்து vivoவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமான ‘vivo Sri Lanka’ வை பார்வையிடவும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *