பல விசேட முயற்சிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் வீட்டிலிருந்து பணியாற்றுவதனை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தை ஆதரிக்கும் Hutch

வீட்டிலிருந்து பணியாற்றும் ஆரம்பகட்ட முயற்சியினை முன்னெடுப்பதன் மூலம், COVID-19  வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்களை தனிமைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட விசேட அறிக்கையின் மூலமாக Hutch நிறுவனமானது,  சந்தாதாரர்கள் தகவல்களை அறிந்து வைத்திருக்க தொடர்ச்சியாக இணைந்திருப்பதற்கும், அவர்களின் நாளாந்த செயற்பாடுகளை வீட்டிலிருந்தவாறு தொடரவும் வழிகோலும் பல புதுமையான முயற்சிகளை விரைவாக முன்னெடுப்பதன் மூலம் அரசாங்கத்தின் முயற்சிகளில் தான் பங்கெடுத்துள்ளமை தொடர்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றது.

இந்த முதல் முயற்சியானது,  Hutch சந்தாதாரர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமின்றி, மொபைல் சேவைகளை அணுகுவதற்காக தொடர்ந்து airtime கிரெடிட்டினை பெற்றுக்கொள்வதனை உறுதி செய்வதாகும். இந்த வகையில் Hutch தனது ஒன்லைன் ரீசார்ஜ் வசதியை Hutch இணையத்தளத்தின் மூலம் உபயோகிப்பதனையும், அதன் Hutch Self Care app அப்ளிகேஷன் மூலம் பக்கேஜ்களை வசதியாக கொள்வனவு செய்வதனையும் ஊக்குவிப்பதோடு,  அதன் சந்தாதாரர்களுக்கு மேம்பட்ட airtime கடன்களையும் வழங்கின்றது. Hutch தனது https://online.hutch.lk/hopp/ இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ரீலோட் மற்றும் கட்டணப்பட்டியல் செலுத்துகைக்கு 10% போனஸ் சலுகையை வழங்கி ஊக்குவிக்கின்றது. இந்த சலுகை  2020 மார்ச் 31 வரை அனைத்து முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு இணைப்புகளுக்கும் செல்லுபடியாகும்.

இரண்டாவதாக, வழக்கமான முகவர்களால் செயற்படுத்தப்படும் அழைப்பு நிலையங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை மாத்திரமே வழங்கும் நிலையில், Hutch சந்தாதாரர்கள் தங்களது அவசர கேள்விகளுக்காக வாட்ஸ்அப், வைபர், எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் ஊடாக Hutch பிரதிநிதிகளைத் தொடர்ந்து தொடர்புகொள்ள முடிவதுடன், அங்கு உங்கள் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கப்படும்.

TRCL  உடன் இணைந்து Hutch பல புதுமையான முற்கொடுப்பனவு தயாரிப்புகளை ஊக்குவித்துள்ளது. இது அனைத்து Hutch சந்தாதாரர்களும் எப்போதும் இணைந்திருக்க வழிகோலும். கால அடிப்படையிலான எல்லையற்ற இணையத்தை வழங்கும் CliQ 3G, விசேட 25% கழிவுடன் வழங்கப்படும். டேட்டா ஒதுக்கீடு முடிவடைகின்றமை தொடர்பில் கவலையின்றி குடும்பத்திற்கு அறிவூட்டுவதுடன், பொழுதுபோக்காகவும் வைத்திருக்க 30 நாட்களுக்கு எல்லையற்ற YouTube வழங்கப்படுகிறது. அதன் சந்தாதாரர்களுக்கு அதிகபட்ச ஒதுக்கீட்டு பெறுமதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் 100% Anytime  தரவு பொதிகளை அறிமுகப்படுத்திய முதல் இயக்குனர் Hutch என்பது குறிப்பிடத்தக்கது.

Hutch, TRCSL  உடன் இணைந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் eLEARN இற்கான இலவச அணுகலை விரிவுபடுத்தியுள்ளதன் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கைகளைத் தொடர உதவுகிறது.

Hutch அதன் நாடு தழுவிய 4 ஜி உட்பட, புதிய பெரிய மற்றும் மேம்பட்ட வலையமைப்புடன் இலங்கையில் COVID-19 வைரஸை எதிர்ப்பதில் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதில் பெருமையடைகின்றது.

“இந்த நெருக்கடி நிலையில் பல்வேறு சமூக இணைப்புத் தேவைகளை நிவர்த்தி செய்யும் காத்திரமான நடவடிக்கைகளுக்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL ) மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாங்கள் குறிப்பாக பாராட்ட விரும்புகிறோம்,” என Hutch இன் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. திருக்குமார் நடராசா தெரிவித்தார். 

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *