ஒவ்வொரு Nova 7 SE மற்றும் Nova 7i கொள்வனவுடனும் வாடிக்கையாளர் மீது பரிசு மழையை பொழியும் Huawei

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, தனது வாடிக்கையாளர்களுக்கு Huawei வர்த்தகநாமத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி செலுத்தும் முகமாக உற்சாகமான பரிசுகளை வழங்குகின்றது. Huawei Nova 7 SE மற்றும் Huawei Nova 7i  ஸ்மார்ட்போன்களை அனைத்து Huawei experience centres , Singer காட்சியறைகள், நாடு முழுவதுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் Daraz.lk , Singer.lk வழியாக ஒன்லைனில் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த அற்புதமான பரிசுகளுக்கு தகுதியுடையவர்களாகின்றனர். மேலும், செலுத்தும் பணத்திற்கு சிறந்த பெறுமதியை இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வழங்குகின்றன.

Nova 7 SE, Huawei நிறுவனத்தின் முதல் நடுத்தர 5G ஸ்மார்ட்போன் என்பதுடன் சிறப்பம்சங்களால் நிரம்பிய Nova 7i மூலம் பலரின் மனங்களை உற்சாகப்படுத்தியுள்ளதுடன், ஸ்மார்ட்போன் ஆர்வலர்களை அதன் முக்கிய அம்சங்களை ஆராய்ந்து பார்க்க ஊக்குவிக்கின்றது.

ஒவ்வொரு Huawei Nova 7i வாங்கும் போதும், வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சியான பரிசு பொதிகள் வழங்கப்படுகின்றன. பாவனையாளர்கள் தமது USB ports மற்றும் கேபிள்களை வசதியாக எடுத்துச் செல்ல உள்நோக்கிச் சுருக்கிக்கொள்ளக்கூடிய USB Carry case, குறிப்புகளை எடுத்துக்கொள்வதற்கான நோட்புக், ஸ்மார்ட்போனுக்கு உறுதியான பிடியை வழங்கும் ரிங் ஹோல்டரும் பரிசுகளாக கிடைக்கின்றன.

இதற்கும் மேலதிகமாக, ஒவ்வொரு Huawei Nova 7 SE கொள்வனவுடனும் வாடிக்கையாளர்கள் குடை, மீள்பயன்பாட்டுக்குரிய, கழுவக்கூடிய, இலகுவாக கொண்டு செல்லக்கூடிய, மடித்து வைக்கக்கூடிய, சேமித்து வைக்கக்கூடிய, பல தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய Canvas bag , வேகமான வாழ்க்கை முறைக்கு ஏற்ற பல்நோக்கு spray & wipe  என பல சிறந்த டீல்களை வழங்குகின்றது.

இவற்றுக்கும் மேலதிகமாக, Huawei Nova 7i மற்றும் Nova 7 SE ஆகியவற்றின் முதன்மை அம்சங்கள் தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது.

Nova 7 SE, Huawei Kirin 820 5G சிப்செட்டுடன் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேகமான மற்றும் தடையில்லாத செயல்திறனை உறுதிப்படுத்துகிறது. இது 8GB RAM மற்றும் 128GB ROM ஆகியவற்றைக் கொண்டுள்ளமையானது பாவனையாளர்களுக்கு தடையற்ற ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது.

8GB RAM என்றால் பல செயற்பாடுகளுக்கு சௌகரியமானதென்பதுடன், உங்களுக்கு பிடித்த அப்ளிகேஷன்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கேம்ஸ்களைப் பதிவிறக்குவதற்கான எல்லையற்ற அணுகலுக்காக 128GB  நினைவகத்தை வழங்குகிறது.

Huawei Nova 7 SE ஒரு குவாட் கெமரா அமைப்புடன் கூடியது. இதனால் பாவனையாளர்கள் ஒவ்வொரு தருணத்தையும் விவரங்களுடன் படம் பிடிக்க அனுமதிக்கிறது. இதன் 64MP உயர் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கெமரா, 8MP Ultra Wide Angle Lens, 2MP bokeh lens மற்றும்2 MP Macro lens கலவையானது மிகவும் தெளிவான, அசலான படங்களை பிடிக்கின்றது.

இதன் 16MP முன்னணி கெமராவும் பின்புற கெமராவுக்கு இணையாக சிறப்பாக உள்ளதுடன், பகல் மற்றும் குறைந்த ஒளி நிலைகளில் சிறப்பாக செயல்படுகிறது. இது 4000 mAh battery மின்கலம் மற்றும் Huawei Super Charge (Max 40 W) இனால் வலுவூட்டப்படுவதுடன், எவ்வித தடையுமின்றி பாவனையாளர்கள் கேம்ஸ்கள், வீடியோ ஸ்ட்ரீமிங் வீடியோ மற்றும் இணையப்பாவனை என தமது நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

மேலும், Huawei Nova 7i, 128 ஜிபி நினைவகம் 8GB RAM போன்ற மிகவும் திறமையான தொழில்நுட்ப அம்சங்களால் நிரம்பியுள்ளது. இது Kirin 810 சிப்செட் மூலம் வலுவூட்டப்படுகின்றது. சக்திவாய்ந்த சிப் மற்றும் 8GB RAM ஆகியவற்றின் கலவையானது வேகமான மற்றும் சீரான செயல்திறனை உறுதி செய்கிறது.

இதன் 48MP பிரதான கெமரா, 8MP Ultra wide-angle கெமரா, 2MP Macro கெமரா மற்றும் 2MP Depth கெமரா கலவையானது பாவனையாளர்கள் ஆக்கப்பூர்வமாக இருக்கவும், தெளிவான மற்றும் பிரம்பிக்க வைக்கும் புகைப்படங்களை எடுக்கவும் உதவுகிறது. இதன் 4200mAh பெரிய மின்கலமானது பாவனையாளரின் ஸ்மார்ட்போன் பணிகளை மின்கலத்தினால் ஏற்படக்கூடிய எவ்வித இடையூறும் இல்லாமல் தொடர அனுமதிக்கிறது.

இதற்கும் மேலதிகமாக, அதன் 40W Huawei super charge  தொழில்நுட்பமானது, 30 நிமிடங்களில் சாதனத்தை 70% வரை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. இப்போது பிரம்மிக்க வைக்கும் பரிசுப்பொருட்களுடன் 5G உலகத்தை Huawei Nova 7 SE உடன் அனுபவித்து மகிழவும், Huawei Nova 7i உடன் பொழுதுபோக்கு உலகில் மூழ்கி கொண்டாடுவதும் ஓர் அடி தூரத்திலேயே உள்ளது.

Huawei experience centers, நாடுபூராகவும் உள்ள Singer காட்சியறைகள், மற்றும் Daraz.lk மற்றும் Wow.lk இணையத்தளங்கள் மூலமும் Huawei Nova 7 SE இனை ரூ. 64,999   என்ற விலைக்கும், Huawei Nova 7i இனை ரூ.47,999  என்ற விலைக்கும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *