புத்தம் புதிய முதல் Mercedes-Benz Sprinter Single Cab வாகனத்தை விநியோகம் செய்த DIMO

இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு விநியோகஸ்தரான Diesel & Motor Engineering Plc (DIMO) நிறுவனம், புத்தம்புதிய Mercedes-Benz Sprinter வாகனத்தை அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளது. உலகளாவிய ரீதியில் அதிகம் விற்பனையாகும், வியத்தகு வசதிகளுடன் கூடிய, ஏனைய நவீன ரக வாகனங்களின் மத்தியில் தன்னிகரற்று விளங்கும்Mercedes-Benz Sprinter,சரக்கு (Cargo) போக்குவரத்தில் புதிய அத்தியாயத்தினை ஆரம்பித்துள்ளது. இது அறிமுகப்படுத்தப்பட்ட தினத்தன்று, இந்த மாதிரியின் முதல் வாகனம், இலங்கையின் முன்னணி லொஜிஸ்டிக்ஸ் நிறுவனமான Colombo Logisticsஇற்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், Major General Chagie P Gallage (Rtd) – Group Consultant of Colombo Logistics, Lasantha Soysa – CEO of Colombo Port Services (Pvt) Ltd, Ranjith Pandithage – Chairman & Managing Director of DIMO, Gahanath Pandithage – Group CEO of DIMO, Asanga Ranasinghe – Director/CMO of DIMO, Rajeev Pandithage – Mercedes-Benz Cluster Head of DIMO மற்றும் Shamal Fernando – Business Unit Manager of (Mercedes-Benz Commercial Vehicles) DIMOஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

புதியSprinter Single Cab வாகனமானது,Mercedes-Benz இன் வர்த்தக ரீதியான வாகனங்களில், உலகளாவிய ரீதியில் மிகவும் வரவேற்பை பெற்ற மாதிரியாகும். 190bhpவரையான குதிரை வலு கொண்ட, 2.2லீற்றர் இரட்டை டெர்போ என்ஜின் (twin turbo engine) மற்றும் மேலதிக 7 வேக தன்னியக்க கியர் பெட்டி (7 speed automatic gearbox)ஆகியவற்றுடன் கூடிய Sprinterவாகனம், அதிகசக்தி,குறைந்த பராமரிப்பு செலவு, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், இசைவாக்கமடையக்கூடிய தன்மை ஆகியவற்றுடன் சாரதிக்கும், பயணிகளுக்கும் மேம்படுத்தப்பட்ட சௌகரியத்தை வழங்குகின்றது. இந்த வாகனமானதுஎதிர்காலத்தில் இப்பிரிவு வாகனங்களுக்கான அளவுகோலாக இருக்குமென்பதால், இலங்கையில் உள்ள சரக்கு தள இயக்குனர்கள், கட்டுமான துறையினர், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் உள்ளிட்ட ஆற்றல்மிக்க வாடிக்கையாளர்களை, Sprinter Single Cabகவருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Major General Chagie P Gallage (Rtd) – Group Consultant of Colombo Logistics,இது தொடர்பில்கருத்து தெரிவிக்கையில்,”இந்த முதலீடு பிரதானமாக கொழும்பு துறைமுகத்தில் எங்கள் செயல்பாடுகளுக்கானது. இது ஒரு Mercedes-Benz என்பதாலும்,DIMOவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாலும், புதிய Sprinter பல ஆண்டுகளுக்கு சீராக இயங்கும் என்றுநாங்கள் நம்புகிறோம். எங்களிடம் ஏற்கனவே கார்கள் மற்றும் ஒரு லொறி உட்பட பல Mercedes-Benz வாகனங்கள் உள்ளன. DIMOவின் சேவை தரமானது நிரூபிக்கப்பட்ட திறன்களுடன் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்குமென உத்தரவாதமளிக்கப்படுகின்றது. மேலும், பல வருடங்களாக நாம் அவர்களுடன் நெருங்கிய உறவை கட்டமைத்துள்ளதால், ஒரு பங்காண்மை நிறுவனம் போன்றதாகும். DIMOவிலிருந்து அதிகமான Sprinters மற்றும் பிற வாகனங்களை கொள்வனவு செய்ய ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம். மொத்தத்தில், இது எங்களுக்கு ஒரு சிறந்த முதலீடாகும், மேலும் எதிர்காலத்திலும் DIMOவுடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் காத்திருக்கின்றோம், ” என்றார்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *