உலகின் தலைசிறந்த வணிக நோக்கிலானEpson புரொஜெக்டர்களை புத்தாண்டில் அறிமுகப்படுத்தியுள்ள Singer

இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதன விற்பனையாளரான Singer Sri Lanka PLC , புதிய வருடத்தில் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை புதிய மற்றும் சிறந்த தயாரிப்புகளுடன் வலுவூட்டும் நம்பிக்கையான கண்ணோட்டத்துடன் அடியெடுத்து வைத்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த வணிக நோக்கிலான புரொஜெக்டர்களை சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தியதுடன் இந்த புத்தாண்டைக் கொண்டாடSinger நிறுவனம் Epson   உடன் கைகோர்த்துள்ளது. விளக்கக்காட்சிகள் உட்பட நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகளுக்கு துணையாக அமையும் வகையில் பல வகையான வணிக நோக்கிலான Epson புரொஜெக்டர்களை Singer அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகளாவிய புரொஜெக்டர் சந்தையில் முன்னணியில் திகழும் Epson நிறுவனம், Singer நிறுவனத்தை முதற்தர பங்காளராக நியமித்தமையைத் தொடர்ந்தே இந்தப் புதிய தயாரிப்பு வரிசை அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்த நியமனமானது Singer நிறுவனத்தின் தொழில்நுட்ப தயாரிப்புகளின் வரிசையை மேலும் விரிவுபடுத்துவதுடன், அதன் 50 இற்கும் அதிகமான வர்த்தகநாமங்களுடன்,  மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமமும் இணைந்து கொள்கின்றது.

உலகில் முதலிடத்தைக் கொண்டுள்ள புரொஜெக்டர் வர்த்தகநாமமான Epson, 2019 ஆம் ஆண்டில் 41.1% உலகளாவிய சந்தைப் பங்கையும், 44.4% தெற்காசிய சந்தைப் பங்கையும் கொண்டிருந்தது. உயர்தரமான தயாரிப்புகளை வழங்குவதற்கு நன்கறியப்பட்ட ஜப்பானிய தொழில்நுட்பத்தில் உருவானதே Epson ஆகும். அதன் தனியுரிமம் கொண்ட 3LCD தொழில்நுட்பமானது Epson புரொஜெக்டர்கள் சந்தையில் அதன் போட்டியாளர்களின்  புரொஜெக்டர்களுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிக வண்ண பிரகாசத்துடன் கூடிய அசல் தோற்றம் கொண்ட படங்களை வழங்க உதவுகிறது.

தற்போது, அவ்வகையான 3 உயர் தரத்திலான Epson வணிக நோக்கிலான புரொஜெக்டர்களான -EB-X05, EB-X41 மற்றும் EB-S05   ஆகியன நாடுபூராகவும் உள்ள Singer காட்சியறைகள் மற்றும் www.singer.lk என்ற இணையத்தளம் மூலமாகவும் கிடைக்கின்றன.

Epson புரொஜெக்டர் தொடர்பில் Singer Sri Lanka PLC இன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர், ஷனில் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த புதுவருடத்தில் சிறந்த மனநிலையுடன் எமது வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க  தயார்நிலையில் இருக்கின்றோம். புரொஜெக்டர்களுக்கான சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான Epson உடனான எமது புதிய கூட்டணியானது வரவேற்கத்தக்க ஒரு சேர்க்கையாகும். நாடளாவிய ரீதியிலான எமது காட்சியறை வலையமைப்பினூடாக தற்போது புகழ்பெற்ற Epson புரொஜெக்டர்களை சொந்தமாக்கிக் கொள்வதற்கு  இலங்கையின் பெருநிறுவன மற்றும் வணிகப் பிரிவுகளுக்கு சிறந்த சந்தர்ப்பம் அமைந்துள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தயாரிப்புக்கள் கிடைக்கும் வகையில் நாங்கள் எப்பொழுதும் Singerஇல் உலகத்தரமிக்க வர்த்தகநாமங்களுடன் கூட்டணியமைக்கின்றோம். எமது வணிகப் பிரிவின் டிஜிட்டல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு நாம் இன்னும் பல Epson தயாரிப்பு வரிசைகளைத் தொடர்ந்து வெளியிடுவோம்,” என்றார்.

இந்த புரொஜெக்டர்கள் அனைத்தும் ஆற்றல் திறன்மிக்கவை,  மிகவும் இலகுவாக கொண்டு செல்ல முடியும் என்பதுடன்  கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கின்றன . அலுவலக பயன்பாட்டிற்கு மேலதிகமாக, இந்த புரொஜெக்டர்களை திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தலாம். இந்த புரொஜெக்டர்கள் Epson 3LCD தொழில்நுட்பம் மற்றும் RGB liquid crystal தொழில்நுட்பம், நீடித்த ஒளி மூலங்கள் போன்ற சில அம்சங்களை பொதுவாகக் கொண்டுள்ளன.  அவற்றால் 30 அங்குலங்கள் முதல் 300 அங்குலங்கள் வரையான திரை அளவையும் மற்றும் 2.17 மீட்டர் வரையான வீச்சு தூரத்தை அடைய முடியும். மேலும், AV mute slide, automatic keystone correction, built-in speaker, longer lamp life மற்றும்  Wi-Fi இணைப்புப்போன்ற மேம்பட்ட  சிறப்பம்சங்களை உள்ளடக்கியதுடன், Blackboard, Cinema, Dynamic, Presentation, SRGB போன்ற  அதிக வர்ண பிரகாசத்துடன் கூடிய வீடியோ  முறைகளையும் வழங்குகின்றன.

இலங்கையின் நுகர்வோர் சாதங்களின் சந்தையில் முதலிடத்தைக் கொண்டுள்ள Singer Sri Lanka PLC பல வகையான உயர் தரமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தகநாமங்களை நாட்டில் வளர்ந்து வரும் நுகர்வோருக்கு வழங்குவதில் பெயர் பெற்றது. அதன் 430 இற்கும் மேற்பட்ட Singer விற்பனை நிலையங்கள், உறுதியான விநியோகஸ்தர் வலையமைப்பு மற்றும் இலத்திரனியல் தளம் (www.singer.lk) , ஆகியவற்றுடன் 600 இலத்திரனியல் சாதனங்கள், 1200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தநாமங்களைக் கொண்டுள்ளது. ‍

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *