Huawei Sri Lanka ‘எதிர்காலத்திற்கான விதைகள்’ 2020 ஆரம்பம்

Huawei நிறுவனம் இலங்கையில் 5ஆவது முறையாக, ‘எதிர்காலத்துக்கான விதைகள்’  (Seeds for the Future) எனும்  தனது தனித்துவமான பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டத்தை இவ்வார ஆரம்பத்தில், 2020 டிசம்பர் 14ஆம் திகதி அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வு, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இலங்கைக்கான சீனத் தூதர் கீ ஷென்ஹோங், Huawei Sri Lanka நிறுவனத்ின் பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யி ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எதிர்காலத்திற்கான விதைகள் திட்டமானது, இலங்கை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூன்றாம் நிலை மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை குறித்த அறிவை பெற்றுக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இத்திட்டத்தின் மூலம் அவர்கள், தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை மற்றும் Huawei நிறுவனத்தின் சமீபத்திய தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவைப் பெற வழிவகுக்கின்றது. இதில் 5 மாகாணங்களிலுள்ள, 10 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 16 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் “கல்வித் துறையின் வளர்ச்சிக்கும், தற்போதைய உலகளாவிய சூழலில் அறிவு பரிமாற்றத்திற்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிற்றல் தொழில்நுட்பம் என்பன மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. எனவே இலங்கை அரசாங்கம், எதிர்கால தலைமுறையினர் மற்றும் அவர்களின் கல்வியின் வளர்ச்சிக்காக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிற்றல் தொழில்நுட்பங்களில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது” என்றார்.

Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யி கருத்துத் தெரிவிக்கையில், “இத்திட்டமானது, இலங்கை மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையை நன்கு புரிந்துகொள்ளவும், உங்கள் தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தவும் உதவும் என, நான் நம்புகிறேன். இது நீங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள உங்கள் எல்லையை மேலும் விரிவாக்குவதற்கும் சீனாவைப் பற்றிய உங்கள் புரிதலை ஆழமாக்குவதற்கும் உதவும். இலங்கை பல்கலைக்கழகங்களுடனான எங்கள் ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்தும் பலப்படுத்துவோம்.” எனத் தெரிவித்ததோடு, மாணவர்களின் எதிர்கால தொழில்துறை வாழ்க்கை சிறப்புற அமைய தனது வாழ்த்துகளையும்  தெரிவித்தார்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *