தெற்காசியாவில் சேவை மேன்மைக்காக DIMO நிறுவனத்தை அங்கீகரித்த Mercedes-Benz AG

சிறந்த வாடிக்கையாளர் சுட்டெண் Customer Satisfaction Index (CSI) மற்றும் தேறிய ஊக்குவிப்பு மதிப்பெண் Net Promoter Score (NPS) ஆகியவற்றைப் பெற்றுக் கொண்ட DIMO நிறுவனத்துக்கு, Mercedes-Benz AG அண்மையில் நடைபெற்ற தெற்காசியா II சேவை மேன்மை பிராந்திய மெய்நிகர் விருது வழங்கும் நிகழ்வில் ‘தெற்காசிய பிராந்திய ‘Mercedes-Benz Service Excellence Award 2019’ விருது வழங்கி கௌரவித்தது. பிலிப்பைன்ஸ், புரூனே மற்றும் பிராந்தியத்தின் பிற பொது விநியோகஸ்தரான நாடுகளை பிந்தள்ளி இந்த கௌரவ விருதினை பெற்றதன் மூலம், DIMO தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விற்பனைக்குப் பின்னரான அனுபவத்தை வழங்கும் பொருட்டு கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்துள்ளது.

இந்த வருடத்தின் Mercedes-Benz தெற்காசியா II சேவை மேன்மை விருதுகள், சேவை ஆலோசகர்களிடையே திறன்களை வளர்ப்பதற்கான நோக்கில் Mercedes-Benz AG அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களின் சிறந்த சேவை ஆலோசகர்களையும் கௌரவித்தது. இந்த மெய்நிகர் விருது வழங்கும் நிகழ்வில் DIMOவின் Mercedes-Benz சேவை நிலையத்தின் மூன்று நீண்டகால ஊழியர்களான ஹிருன் கோரலகே, ஷெல்டன் விஜரத்னே மற்றும் சாஹிந்த வாசலதந்திரிகே ஆகியோர் இப் பிராந்தியத்தில் ‘ஆண்டின் சிறந்த சேவை ஆலோசகர்கள்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டனர்.

Mercedes-Benz AG அதன் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் தமது பராமரிப்புக்கு பின்னரான சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் உடனான ஈடுபாட்டின் தரம் ஆகியவற்றை மேம்படுத்த, அவர்களுக்கு உந்துதல் அளிக்கும் நோக்கில் அந்தந்த நாடுகளில் வருடாந்த வாடிக்கையாளர் கணக்கெடுப்புகளை நடாத்துகின்றது.

வாடிக்கையாளர் அனுபவத்தின் வெவ்வேறு அம்சங்களில் கவனம் செலுத்துவதற்காக குறிப்பாக இந்த வாடிக்கையாளர் கணக்கெடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், Mercedes-Benz AG அங்கீகரித்த சேவை மையத்துடன் ஒரு சேவை சந்திப்பை வசதியாக திட்டமிடக் கூடிய வாடிக்கையாளரின் திறனுடன் ஆரம்பிக்கின்றன. அதைத் தொடர்ந்து, சேவை நிலையத்தால் முன்னெடுக்கப்படும் சேவைப் பணிகளின் தரம், சேவை நிலையத்தால் சர்வதேச தரங்களுக்கு இணங்குவது, குழு உறுப்பினர்கள் வெளிப்படுத்தும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு தரநிலைகள் மற்றும் வாகனத்தை பாதுகாப்பாகவும் சரியான நேரத்தில் திரும்பவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல் போன்ற பண்புக்கூறுகள் இந்த வாடிக்கையாளர் கணக்கெடுப்பில் Mercedes-Benz AG இனால் முழுமையாக மதிப்பிடப்படுகின்றது. DIMO அதன் சேவை விநியோகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தனது வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துகின்றமையில் விரிவாக கவனம் செலுத்துவதுடன், இது இந்த சுயாதீன வாடிக்கையாளர் கணக்கெடுப்புகளில் பிரதிபலிக்கின்றது.

DIMOவின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ரஞ்சித் பண்டிதகே, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,”இந்த பிராந்திய விருதுகள், அன்பான Mercedes-Benz வாகனங்களுக்கு நீங்கள் நம்பக்கூடிய ஒரே இடம் DIMO மட்டுமே என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும், நிறுவனத்தின் பெறுமானங்களுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதில் எங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. இந்த சாதனைகள் இலங்கைக்கு சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட வர்த்தகநாமங்களை கொண்டு வருவதற்கான நமது திறன்களையும் வெளிப்படுத்துகின்றன. DeX Automotive செயலி மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட சேவை ஆலோசகர் எண்ணக்கரு ஊடாக Mercedes-Benz வாடிக்கையாளர்களுக்கான சேவை முன்பதிவு மற்றும் ஒன்லைன் கொடுப்பனவுகளை அறிமுகப்படுத்துவது எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் அண்மைய முயற்சிகள் ஆகும். DIMOவில், தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஒரு தனித்துவமான வாடிக்கையாளர் பயணத்தை உருவாக்க எங்கள் ஊழியர்களை Mercedes-Benz AG உலகளாவிய பயிற்சியுடன் மேம்படுத்த நாங்கள் எப்போதும் முயற்சி செய்கிறோம்,” என்றார்.

இலங்கையில் உள்ள ஒரே அங்கீகரிக்கப்பட்ட Mercedes-Benz AG சேவை நிலையமாக,  Mercedes-Benz Centre of Excellence ஆகத் திகழும்- DIMO 800, அதிநவீன Mercedes-Benz நிலையத்தில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இது Mercedes-Benz AG இனால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்பு கருவிகள் மற்றும் உபகரணங்கள், மென்பொருள் அப்டேட்கள், பழுதுபார்ப்பு வழிகாட்டல்கள் மற்றும் செயன்முறைகள், Mercedes-Benz சேவை 24 மணி நேர நாடு முழுவதுமான வீதியோர உதவி, கணனிமயமாக்கப்பட்ட வாகன பராமரிப்பு பதிவுகள் மற்றும் பல சேவைகளை உள்ளடக்கியது. இவை அனைத்தும் வாகனத்தின் பாதுகாப்பு ஒவ்வொரு அடியிலும் உத்தரவாதம் அளிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படுகின்றன.

Mercedes-Benz  அசல் பாகங்களை பயன்படுத்துவதானது Mercedes-Benz உரிமையாளர்களுக்கு மன அமைதியை அளிக்கிறது. அதே நேரத்தில் வாகனத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதோடு, தனித்துவமான தரம் மற்றும் நீட்டிக்கப்பட்ட மைலேஜுடன் கூடிய சிறந்த விலை / செயல்திறன் விகிதம் ஆகியவற்றை வழங்குகின்றது.

DIMOவின் Mercedes-Benz சேவை நிலையம் அனைத்து பழுது மற்றும் சேவைகளுக்கும் Mercedes-Benz அசல் பாகங்களை மட்டுமே பயன்படுத்துவதானது, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மீள் விற்பனை பெறுமதியை உத்தரவாதம் அளிக்கின்றது. மேலும், நாட்டில் Mercedes-Benz வாகனங்களுக்கான Mercedes-Benz AG உலகளாவிய உற்பத்தியாளர் உத்தரவாதத்தை வழங்குவதற்கு இலங்கையில் உள்ள Mercedes-Benz  நிறுவனத்திற்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட முகவர் DIMO ஆகும்.

சரியான பராமரிப்பு மற்றும் கையாள்கை ஒரு Mercedes-Benz  வாகனத்திற்கு மிக முக்கியமானது, அதனால்தான்  Mercedes-Benz AG பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் / சான்றளிக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே ஒவ்வொரு Mercedes-Benz வாகனத்தையும் கையாண்டு சேவை செய்கிறார்கள் என்பதை DIMO உறுதி செய்கிறது. DIMO அதன் நன்கு பயிற்சி பெற்ற Mercedes-Benz AG சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கிறது. எனவே, தங்கள் வாடிக்கையாளர்கள் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதற்காக அதன் மனித மூலதனத்தில் விரிவாக முதலீடு செய்கிறது. இந்த பயிற்சி நிலையங்கள் வழக்கமான ஒன்லைன் பயிற்சி முதல் உற்பத்தியாளர் மற்றும் DIMOவின் Mercedes-Benz சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் வழியாக உள்ளக பயிற்சி வரை கொண்டுள்ளன. அனைத்து நேரங்களிலும் வாடிக்கையாளருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும், அதனுடனான பயணத்தில் வாடிக்கையாளரின் Mercedes-Benz பழுதுபார்ப்பு அல்லது சேவையில் சீரான அப்டேட்களை வழங்கவும் DIMO ஒரு விசேட சேவை ஆலோசகரை நியமிக்கின்றது. இது வாடிக்கையாளர் மற்றும் DIMO இடையேயான நம்பிக்கையையும் உறவையும் உருவாக்குவதிலும் பலப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

உண்மையான பராமரிப்பு, Mercedes-Benz AG பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் நிபுணத்துவம்மிக்க வேலைத்திறன்  மற்றும் சர்வதேச தரநிலைகள்  DIMOவை அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான தெரிவாக ஆக்கியுள்ளது.

DIMOவின் Mercedes-Benz  சேவை நிலையம் அண்மையில் தென்கிழக்கு ஆசியாவில் வாகன உடல் மற்றும் நிறப்பூச்சு பழுதுபார்க்கும் ‘ஒரேயொரு Mercedes-Benz AG சான்றளிக்கப்பட்ட பொது விநியோகஸ்தர்’ வேலைத்தளமாக அங்கீகரிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் இந்த சான்றிதழைப் பெற்ற முதல் பொது விநியோகஸ்தர் DIMO ஆகும்.Mercedes-Benz AG சர்வதேச தரத்தின்படி அனைத்து  Mercedes-Benz வாகனங்கள் அனைத்திற்கும் சேவை வழங்கக் கூடிய நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட இலங்கையில் உள்ள ஒரே Mercedes-Benz சேவை நிலையம் DIMO 800 ஆகும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *