வரவு செலவுத் திட்டத்துக்கு வரவேற்பை வெளியிட்டுள்ள Pelwatte Dairy பாலுற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்க முன்மொழிவுகளைப் பாராட்டுகிறது

உள்ளூர் பால் நிறுவனமான Pelwatte Dairy Industries, அண்மையில் முன்வைக்கப்பட்ட 2021 வரவு செலவுத் திட்டத்திற்கு தனது வரவேற்பை தெரிவித்துள்ளதுடன், பாலுற்பத்தித் துறை மற்றும் மொத்த உணவு உற்பத்தியையும் முன்னேற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளது. பெறுமதிச் சங்கிலியில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் முன்னேற்றத்துக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு செய்யும் Pelwatte நிறுவனத்தின் நோக்கத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், முக்கியமாக பொதுமக்களின் நல்வாழ்வுக்கும் இது மேலும் துணைபுரியும் என்று நம்புகின்றது.

Pelwatte Dairy இலங்கையில் பாலுற்பத்தித் துறையின் பேண்தகு வளர்ச்சிக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், விவசாயிகளையும் அவர்களின் சமூகங்களையும் மேம்படுத்துவதன் மூலம் இந்த வளர்ச்சியை வழிநடாத்துகின்றது. ஆரம்பத்தில் இருந்தே நிறுவனத்தின் இறுதி இலக்கு பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதாகும். இந்த தேசிய இலக்கை அடைய அரசாங்கம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கைகோர்த்து செயல்பட நிறுவனம் மிகவும் ஆர்வத்துடன் உள்ளது. நாடு முழுவதும் அதன் ஊட்டச்சத்து மிக்க பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை விரிவாக்குவதன் மூலம், ​​வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பொருளாதாரங்களை கட்டியெழுப்பவும் எதிர்ப்பார்க்கிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட  வரவு செலவுத் திட்டம் – 2021, பேரினப் பொருளாதார நோக்கத்தின் கீழ் பல துறைகளை உள்ளடக்குவதுடன், உள்நாட்டு பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள வணிக சமூகத்திற்கான வாய்ப்புகள் நிறைந்ததாக கருதப்படுகிறது. இந்த சிறப்பு முதலீட்டு திட்டங்கள் உலகப் பொருளாதாரத்தின் போட்டித்தன்மை நிறைந்த சூழலுக்கு முகங்கொடுக்க உதவும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளன.

மக்களின் வாழ்வில் தாக்கத்தை உருவாக்கும் மூலோபாய கட்டமைப்பில் நிறுவப்படும் பேண்தகு நடைமுறைகளை Pelwatte மதிப்பிடுகின்றது. இதன்படி, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதனால், கிராமப்புற பொருளாதாரங்களில் பாலுற்பத்தியை மேம்படுத்துவது மிக முக்கியமானது என்பதை நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. பாற்பண்ணையாளர்களுக்கான குறைந்தபட்ச வட்டி கொண்ட  சிறப்பு கடன் திட்டங்கள் குடும்பங்களுக்கு பால் தரும் கால்நடைகளை வாங்கவும், சுற்றுச்சூழல் நட்பு கால்நடை கொட்டகைகளை அமைக்கவும், பேண்தகு  பண்ணைகள் மற்றும் உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை வாங்கவும் உதவும் என்று அது நம்புகிறது. நாளொன்றுக்கு சுமார் 22 லீற்றர் பாலை வழங்கும் ஆற்றல் கொண்ட பசுக்களை இறக்குமதி செய்வதும் இந்த முன்மொழிவுகளில் அடங்கும். மேலும், ஊட்டச்சத்து மிகுந்த மேய்ச்சல் நிலங்களை   நிறுவுவதற்கான சலுகைகளால் இது மேலும் வலுப்படுத்தப்படும் அதேவேளை, நிறுவனம் தனது பாற்பண்ணையாளர்களின் வலையமைப்பை அதிகரிக்கவும், தொலைநோக்குப் பார்வைக்கும் ஆதரவளிக்கும்.

பணக்கொள்கை மற்றும் இறைக்கொள்கை இந்த நோக்கத்தை ஆதரிக்கும் என்று Pelwatte Dairy நம்புகிறது. இந்த முன்மொழிவுகளில் வரி விடுமுறைகள் மற்றும் சலுகைகள் வரை பல நிவாரணங்கள் மற்றும் அனுகூலகங்கள் அடங்குவதுடன், அவை விவசாயம் மற்றும் பாலுற்பத்தித் துறையை மேம்படுத்த உதவும். மூலோபாய அபிவிருத்திச் சட்டமானது பாலுற்பத்தித் துறை  உள்ளிட்ட பல துறைகளுக்கு, குறிப்பாக மாறி வரும் சூழலில் அனுகூலங்களை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது ஏற்றுமதிக்காக பாலுற்பத்திகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான சிறப்பு வரி சலுகைகளுக்கு மேலதிகமானதாகும். நவீன தொழில்நுட்ப நடைமுறைகளை செயல்படுத்துவதற்கும், பாலுற்பத்திப் பொருட்களை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

உள்நாட்டு பாலுற்பத்தியை படிப்படியாக மேம்படுத்தும் பொருட்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ள அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த, Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மல் விக்ரமநாயக்க, “உள்நாட்டு பால் தேவையை பூர்த்தி செய்யவும், உள்ளூர் பால் விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் உள்ளூர் பாலுற்பத்தித் துறையை உயர்த்தவும் Pelwatte ஏற்கனவே உறுதிபூண்டுள்ளது. இது பொருளாதார சுற்றுச்சூழல் மற்றும் மீட்சிக்கும் நேரடியாக துணைபுரிவதுடன், எங்கள் பெறுமதி சங்கிலியின் மிக முக்கியமான கூறுகளாக இருக்கும் பாற்பண்ணையாளர்களின் பொருளாதார நிலையையும் உயர்த்தும்,” என்றார்.

உள்நாட்டு பால் உற்பத்தியானது  40% திரவ பால் தேவைக்கு போதுமானதாக இருக்கும் என்று விலங்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார  திணைக்களம் 2018 ஆம் ஆண்டில் மதிப்பீடு செய்திருந்தது. உள்ளூர் பாலுற்பத்தித் துறையின் வளர்ச்சியானது உணவுப் பாதுகாப்பு, பால் தன்னிறைவு, கிராமப்புற வறுமையைக் குறைத்தல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அடிப்படையிலான நோய்களைக் குறைத்தல் ஆகியவற்றை உறுதி செய்யும்.

தரம், சுவை மற்றும் ஆரோக்கியம் ஆகிய நிறுவனத்தின் வழிகாட்டும் தூண்களுக்கு இணங்க, உலகளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியமங்களை கடைபிடிக்கும் மிக உயர் தரமான தயாரிப்புகளை வழங்க Pelwatte எப்போதும் பாடுபடுகிறது. பாற்பண்ணையாளர்களிடமிருந்து பாலை சேகரித்து, செயன்முறைக்குட்படுத்தி சந்தைக்கு விநியோக்கும்  Pelwatte இன் ஈடிணையற்ற  72 மணித்தியால பாற்பண்ணையாளரிடமிருந்து விற்பனை நிலையம் வரையான  காலப்பகுதியானது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். இது அதன் புத்துணர்ச்சி, ஊட்டச்சத்து மற்றும் ஒட்டுமொத்த உணவூட்டத்தை உறுதி செய்வதன்  மூலம் தமது தயாரிப்புகள் சிறந்த தரம் வாய்ந்தன என்பதை காலத்துக்கு காலம் உள்நாட்டு பால் பதப்படுத்துநர்கள் நிரூபித்துள்ளனர்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *