vivo V20 தொடருடன் #bethefocusalways

மிக நீண்டகாலமாக ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்கள் தமது ஸ்மார்ட்போனில் உள்ள மிக முக்கியமானதொரு சிறப்பம்சத்தை முன்னிலைப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தின. எவ்வாறாயினும், நாங்கள் முன்னேறிச் செல்கையில், ​​ஸ்மார்ட் கொள்வனவாளர்கள் அதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கியதன் மூலமாக புரசசர் (Processor), கெமரா (Camera), திரை (Display), மூலப்பொருள் (Material), தோற்றம் மற்றும் உணர்வு (Look & Feel), மிக முக்கியமாக போனின் செயல்திறன் (Performance) போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து வெவ்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு இடையில் ஒப்பிட்டு பார்க்க முடிந்துள்ளது. சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மூலம் நம் வாழ்க்கையை விபரிப்பது ஒரு நபரின் அடையாளத்திற்கு அவசியமானதாகி விட்டது. நவீன போக்குகளுக்கு இணங்க, ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் சிறந்த செயல்திறன், போன் பாவனையாளருக்கு உதவும் சிறந்த அம்சங்களைக் கொண்ட அற்புதமான கெமமரா ஆகியவற்றை வழங்குகிறது.

முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது முதன்மையான  vivo V20   தொடரில் இரண்டு புதிய முதன்மையான ஸ்மார்ட்போன்களான V20  மற்றும் V20 SE ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. எந்த சிக்கலான ஒளி நிலைகளிலும் மிகவும் சிறப்பான உயர்ந்த தரத்திலான படங்களை எடுக்கக்கூடிய பேராற்றல் மிக்க திறனை இந்த ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ளது.  V20, 44MP Eye Autofocus மற்றும் 64MP Night கெமராவையும், V20SE 32MP Super Night Selfie மற்றும் 48MP Rear கெமராவையும் கொண்டுள்ளன. V20 தொடரானது சிறந்த தெளிவு மற்றும் கவனம் செலுத்தி சிறந்த படங்களை கிளிக் செய்வதற்கான சிறந்த தரமான கெமரா திறனுடன் வருகின்றது.

vivo V20 தொடரானது தொழில்துறையில் முன்னணி கெமரா தொழில்நுட்பம், எதிர்கால வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த முழுமையான செயல்திறனை வழங்குகின்றது. இளம், வளர்ந்த, நவநாகரிகத்தில் ஆர்வமுள்ள நுகர்வோரின் வாழ்க்கை முறையை பூர்த்தி செய்ய இது மூலோபாய ரீதியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு போன்களும் சிறந்த வடிவமைப்புடன் மட்டுமன்றி வேகமாக நகரும் பாவனையாளர்களுக்கான சக்திவாய்ந்த கணனி கருவியாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. V20 தொடரானது ஆடம்பரமான தோற்றத்தின் உச்சமாக வெளிப்படுவதுடன், அதி நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வண்ணங்களுடன் கூடியதென்பதுடன், இது இளைஞர்களின் ஸ்மார்ட் மற்றும் வளர்ந்து வரும் வாழ்க்கை முறைகளுடன் தடையின்றி ஒத்திசைவதுடன், ஸ்டைலான தோற்றம் மற்றும் அசாதாரண செயல்திறன் கொண்ட ஒரு சாதனத்தைக் கொண்டிருப்பதற்கான அவர்களின் ஆர்வத்திற்கு முற்றிலும் பொருந்துகிறது.

சுய வெளிப்பாட்டின் அடையாளமாக திகழும் V20 7.88mm தடிமன் மற்றும் வெறும் 171 கிராம் எடையுள்ள மெலிதான தோற்றமுடைய முதற்தர ஸ்மார்ட்போன் ஆகும். புதுமையான முன் கெமரா அமைப்புடன் கூடிய vivoவின் Autofocus தொழில்நுட்பம் நகரும் பொருட்களில் கவனம் செலுத்தி கூர்மையான செல்பிக்களை எடுக்கக்கூடியது. இந்த ஸ்மார்ட்போனானது பல தடவை zoom செய்த பின்னரும் மிகவும் துள்ளியமான தெளிவுடன் கூடிய படங்களை எடுக்கக்கூடிய Super Night Mode ஐக் கொண்ட 64MP அதி விசேட பின்பக்க கெமராவைக் கொண்டது. V20 ஆனது துரிதமாக மின்னேற்றல் செய்யக்கூடிய 33W FlashCharge தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் 30 நிமிடங்கள் மின்னேற்றம் செய்து 65% மின்னேற்றலை பெறுவதன் ஊடாக ஒருநாள் முழுவதும் தாக்குப்பிடிக்க முடியும்.

V20 தொடரின் மற்றொரு குறிப்பிடத்தக்க வெளியீடு vivo V20 SE எந்த நேரத்திலும் ஸ்டுடியோ தரமான படங்களுக்கான கூர்மையான திறனைக் கொண்டு வருகிறது. V20 SE  நேர்த்தியான மற்றும் விந்தையான தோற்றத்தைக் கொண்டுள்ளதுடன், இலகு நிறையுடன் கூடிய 3D வளைவுகளானது உயர் பொலிமர் பொருட்களால் ஆனதென்பதுடன், சீரான மற்றும் சௌகரியத் தன்மைக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது புதுமையான 32MP Super Night  கெமெராவினைக் கொண்டுள்ளதுடன், இது இரவு நேரங்கள் மற்றும் இருள் நிறைந்த சூழ்நிலைகளில் கூட வாழ்வின் சிறப்பான தருணங்களை தெளிவாகவும், சிறப்பாகவும் படம் பிடிக்க அனுமதிக்கின்றது.  மேலும்  48MP Multi-Scenario Photography rear கெமெரா, 33W FlashCharge  என இதன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் இதில் ஏராளம்.

ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு தேவையான சிறந்தவற்றை வழங்க புகைப்படம் எடுத்தல், கேமிங், பொழுதுபோக்கு மற்றும் ஸ்மார்ட்போன் வடிவமைப்பு ஆகியவற்றில் மாறிவரும் போக்குகளை நன்கு கற்றறிந்து  V20 தொடர் மூலோபாய ரீதியாக தயாரிக்கப்பட்டுள்ளது.  V20 தொடர் ஸ்மார்ட்போன் துறையில் ஒரு புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ளது. V20 தொடரின் வெற்றியானது இலங்கை சந்தையில் வர்த்தகநாமத்தின் உறுதியான பிடியின் வலுவான பிரதிபலிப்பாகும், மேலும் இப் பிராந்தியத்தில் ஸ்மார்ட்போன் விற்பனையில் தொடர்ச்சியான அதிகரிப்பு காணப்படுகிறது. மேம்பட்ட பாவனையாளர் அனுபவத்துடன் இளம் வாடிக்கையாளர்களுடன் vivo V20 அதிக ஈடுபாட்டை உறுதி செய்துள்ளது. vivo தொழில்நுட்ப புத்தாக்கங்களுக்கு அப்பால் சென்று எங்கள் பாவனையாளரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளதுடன், இது அனைத்து பணிகளையும் எளிதில் செய்யவும், அவர்களின் ஆளுமையை பல்வேறு வழிகளில் தொடர்புபடுத்தவும் உதவுகின்றது.

நோக்கத்துடனான புத்தாக்கம் மற்றும் முன்னணி தொழில்நுட்பத்திற்காக பாடுபடுவதற்கான எளிய மற்றும் முழுமையான குறிக்கோளுக்கு அர்ப்பணித்துள்ள vivoவின் முயற்சி, தனித்துவமான தொழில்நுட்பத்துடன் தரத்தை நிர்ணயிப்பது மட்டுமல்லாமல், மொபைல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடியாகவும் மாறுகிறது. புத்தாக்கத்தை அதன் முதன்மைத் தத்துவமாக கொண்டுள்ள vivo நாட்டிலும் உலகெங்கிலும் இன்னும் பல மைல்கற்களை நிறைவேற்ற எதிர்பார்க்கின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *