காயத்ரி ஷானை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்த HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரோட்பேண்ட் சேவை வழங்குநரான HUTCH, பிரபல சமூக ஊடக பிரபலமும், திரை நட்சத்திரமுமான காயத்திரி ஷானை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்துள்ளது.

இந்த நியமனத்தின் மூலம் HUTCH இன் சேவைகளை பயன்படுத்த தயாராகி வரும் இலங்கை தமிழ் சமூகத்தின் ஒரு பரந்த தளத்துடன் மும்முரமாக இணைந்து செயற்பட அந் நிறுவனம் தயாராகி வருகின்றது.

தமிழ் பேசும் சமூகத்தினரிடையே நன்கு அறியப்படும், பிரபல நட்சத்திரமான காயத்திரி TikTok இல் 2.5 மில்லியன் பின்தொடர்பவர்களையும், Instagram இல் 270,000 பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளதுடன், சமூக ரீதியாக செல்வாக்குச் செலுத்தும் உரையாடல்களை ஊக்குவிக்கிறார்.

அவர் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் நடித்தமையானது அவரை சினிமா நட்சத்திரமாக உயர்த்தியது. HUTCH இன் ‘Bigger and Better’ தகவலை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் காயத்ரி முக்கிய பங்கு வகிப்பார்.

4G ஐ முடியுமானவரை கூடுதலான மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அதன் முயற்சியில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் தனது 4G வலையமைப்பை வலுப்படுத்துவதனை பூர்த்தி செய்துள்ளதன் காரணமாக 2020 ஆம் ஆண்டானது புதிய வாய்ப்புக்களைக் கொண்டுவந்துள்ளது.

இதற்கான உடன்படிக்கையை கையெழுத்திடும் நிகழ்வில் கருத்து தெரிவித்த  HUTCH இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி, ரம்ஸீனா மொர்செத் லாய், “எங்கள் வர்த்தகநாம தூதராக காயத்ரி போன்ற ஒரு பிரபலமான நட்சத்திரத்தை கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். காயத்ரி எம்முடன் இணைந்து கொண்டமையானது எங்கள் முக்கிய தகவல்களையும், சேவை வழங்கல்களையும் பொதுமக்களுக்கு மிகவும் ஈர்ப்பான வகையில் எடுத்துச் செல்வதில் சமூக ஊடகங்களை முற்றிலுமாக பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. ஒரு சமூக பொறுப்புள்ள பெருநிறுவனம் என்ற வகையில், இலங்கை சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியையும் எங்கள் வழங்கல்கள் சென்றடைகின்றன என்பதை உறுதிப்படுத்துவது நமது கடமையாகும். சமூக ஊடகங்கள் அதற்கான சிறந்த தளமென்பதுடன் எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவையை வழங்குவதற்காக எங்களை நிலைநிறுத்துவதில் காயத்ரி எங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவார்,” என்றார்.

காயத்திரி ஷான் கருத்து தெரிவிக்கையில்,”HUTCH வர்த்தகநாம தூதுவராக  இருப்பதில் நான் பெருமைப்படுவதுடன், கௌரவமாகவும் உணர்கின்றேன். HUTCH என்பது உண்மையிலேயே வாடிக்கையாளர்களின் தேவைகளை மையமாகக் கொண்ட ஒரு வர்த்தகநாமமென்பதுடன்,இதன் அண்மைய 4G வலையமைப்பு விரிவாக்கமானது பரந்த வாடிக்கையாளர் தளத்திற்கு பயனளித்தது. அறிவு பகிர்வு அமர்வுகள் மற்றும் ஊடாடும்  பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட திட்டமிட்ட செயற்பாடுகளில் HUTCH சந்தாதாரர்களுடன் தீவிரமாக ஈடுபட நான் எதிர்ப்பார்த்துள்ளேன்,” என்றார்.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட CK Hutchison Holdings Limited இன் இந்த உள்நாட்டு துணை நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, இலங்கையில் உள்ள மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநர்களிடையே முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக  தன்னை நிரூபித்தது. 2019 ஆம் ஆண்டு Etisalat நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர் HUTCH மொபைல் வலையமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்ததுடன்,  தற்போது 078 மற்றும் 072 ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் சேவை வழங்குகின்றது. HUTCH இன் புரட்சிகரமான 4G விரிவாக்கமான ஒரு திருப்பு முனையாக அமைந்ததுடன், 4G வலையமைப்பு மையமாக அதனை முன்னிலைப்படுத்தியது.இந்த விரிவாக்கமானது HUTCH, “Bigger and Better”  சேவை வழங்க உதவியது.  HUTCH தற்போது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களின் வலையமைப்பு தேவைகளுக்கும் தனது சேவையை வழங்கி பூர்த்தி செய்து வருகின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *