5G உடனான முதலாவது நடுத்தர வகை ஸ்மார்ட்போன் Huawei Nova 7 SE

5G உதயமாகிவிட்டது. 5G தொழில்நுட்பத்தின் முன்னோடியும் உலகளாவிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei ஆனது, அண்மையில் 5G உடனான முதலாவது நடுத்தர வகை ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வெளியிட்டுள்ளது. புதிய 5G  அனுபவத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, நிகரற்ற செயல்திறனை வழங்க Huawei Nova 7 SE தன்னிறைவு கொண்டுள்ளது.

Nova 7 SE இனது திரையானது, புதிதாக கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தும் பயனரின்  கவனத்தை ஈர்க்கும் அம்சமாக காணப்படுகின்றது. Nova 7 SE இன் திரையானது, 6.5 அங்குல சிறுதுளையுடனான (Punch) முழுத் திரை கொண்ட, 90.3% திரைக்கு உடல் விகிதத்தை கொண்ட எல்லையற்ற காட்சிகளை வழங்குகிறது. ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட இது, வெள்ளி (Space Silver), பச்சை (Crush Green), ஊதா (Midsummer Purple) ஆகிய தெரிவுகளை கொண்ட, வித்தியாசமான மூன்று வண்ணங்களில் வருகின்றது.

Nova ஸ்மார்ட்போன் தொடர்கள், எப்போதும் சக்திவாய்ந்த கெமராக்களை கொண்டுள்ளதோடு, Nova 7 SE யும் இதற்கு விதிவிலக்கல்ல. இது, 64MP AI Quad camera (4 கெமரா அமைப்பை) கொண்டுள்ளதுடன், ஸ்மார்ட்போன் புகைப்படப்பிடிப்பை மற்றொரு நிலைக்கு எடுத்துச் செல்கிறது. f/1.8 குவியம் மற்றும் 1/1.7 அங்குல புகைப்பட சென்சரைக் கொண்ட 64MP உயர் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கெமராவை கொண்டுள்ளது. f/ 2.4 குவியத்தைக் கொண்ட 8MP அல்ட்ரா-வைட் கோண (Ultra-wide-angle) வில்லை, f/2.4 குவியம் கொண்ட 2MP bokeh வில்லை, மற்றும் f/2.4 குவியம் கொண்ட உருப் பெருக்க வில்லை (macro lens) ஆகியவற்றை கொண்டுள்ளது. அதன் f/2.0 குவியம் கொண்ட 16MP செல்பி கெமரா மிகத் தெளிவாக புகைப்படம் பிடிக்கிறது. இது இரவில் கூட தெளிவான படங்களை பிடிக்கிறது.

Huawei Nova 7 SE ஆனது 4K high-definition (உயர்-வரையறை கொண்ட) வீடியோ, DUAL-VIEW வீடியோ, super slow motion (மிக மெதுவான சலனம்) மற்றும் time-lapse (நேர இடையீட்டு) அமைப்பு உள்ளிட்ட, படைப்பாற்றல் கொண்ட வீடியோக்களை பதிவு செய்ய வழி வகுக்கிறது. தற்போது Huawei Nova 7 SE இன் 64MP பிரதான கெமராவின் உதவியுடன் பயனர்கள், 4K 30FPS high-definition வீடியோவை எளிதாக பதிவுசெய்ய முடிவதுடன், அதில் உள்ளமைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த AI editing (செயற்கை நுண்ணறிவு மாற்றியமைத்தல்) செயல்பாட்டுடன் அதனை மாற்றியமைப்பதற்கும் முடிகிறது. DUAL-VIEW வீடியோவை செயல்படுத்துவதன் மூலம், பயனர்களால், இரண்டு பின்புற கெமரா லென்ஸ்களின் மூலம் ஒரே நேரத்தில் காட்சிகளைப் படம்பிடிக்க முடியும். ஒரு கெமரா லென்ஸ் பிரதான படத்தைப் பதிவுசெய்யும் அதேவேளையில், மற்றொன்று அதன் உருப் பெருக்கி, அதன் நெருக்கமான காட்சியை படம்பிடிக்கிறது. இதன் மூலம் அதன் ஒவ்வொரு விபரமும் கைப்பற்றப்படுகின்றன. அதன் super slow motion பயன்முறை மற்றும் time-lapse pro-mode பயன்முறை மூலம், பயனர்கள் தங்கள் படைப்பாற்றலை மேலும் வெளிப்படுத்தவும், புதிய புகைப்பபடப்பிடிப்பு அனுபவத்தை அனுபவிக்கவும் முடியும். மழைத்துளியொன்று விழும் தருணத்தையோ, வானில் நகரும் மேகங்களின் மெதுவான அசைவையோ அல்லது அது போன்ற அன்றாட காட்சிகளை புதிய வகையில் கைப்பற்ற முடியும். அது எப்போதும் பார்ப்பவரின்  கண்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

5G-ready (தயார் நிலை 5G கொண்ட) Nova 7 SE தொடர்பில், இலங்கையின் Huawei சாதனங்கள் தொடர்பான தலைவர் பீட்டர் லியு தெரிவிக்கையில், “5G அரங்கில் Nova 7 SE ஆனது, ஒரு பாரிய முன்னோக்கிய நகர்வாகும். அனைவருக்கும் 5G இனை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான முயற்சியில், முதலாவது 5G நடுத்தர வகை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் Huawei சரியான நகர்வை மேற்கொண்டுள்ளது. அனைத்து கையடக்கத் தொலைபேசி பயனர்களும் 5G இனை அணுகுவதனை முன்னோடியாகக் கொண்டிருக்கும் வகையில், இலங்கையின் தொலைத் தொடர்பு சேவை வழங்குனர்களால் 5G இணைப்பை விரைவாக அடைவதற்கு உதவுவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.”

Huawei இனால் சுயமாக வடிவமைக்கப்பட்ட Kirin 820 5G SoC புரொசொசரினால் இயக்கப்படுகிறது. Nova 7 SE ஆனது சிறந்த 5G மற்றும் செயலாக்க வேகத்தை வழங்குகிறது. கேமிங் ஆக இருந்தாலும், உயர்தர வீடியோக்களை இயக்குவதாக இருந்த போதிலும், Nova 7 SE ஆனது பின்னடைவு இல்லாத செயல்திறனுடன், சரியான பொருத்தம் மற்றும் திரைப்படங்கள், விளையாட்டுகள், ஏனைய தொலைபேசியின் புதுப்பிப்புகளைப் (update) பதிவிறக்கம் செய்யும் போதும், மிக விரைவான பதிவிறக்க வேகத்தை வழங்குகிறது. Nova 7 SE இன் வேகம் மற்றும் செயல்திறன் அதன் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பகத்தின் மூலம் தங்குதடையற்ற 5G அனுபவத்தை வழங்குகிறது. 8GB RAM ஆனது, மிகவும் அதிதீவிரமானதும், ஒரே தடவையில் பல பணிகளை கையாளும் திறன் கொண்டது. அதே நேரத்தில் 128GB ROM ஆனது, பதிவிறக்கப்பட்ட செயலிகள், புகைப்படங்கள், வீடியோக்கள், கேம்களை சேமிக்க போதுமான இடத்தை வழங்குகிறது. மிருதுவான 5G கேமிங் அனுபவத்தைக் வழங்கும் வகையில், இது புதிய தலைமுறை GPU Turbo மற்றும் மேம்படுத்தப்பட்ட AppAssistant (செயலி உதவி) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Huawei Nova 7 SE ஆனது, ஒரு சக்தி வாய்ந்த மின்கலத்தை கொண்டுள்ளது. அதன் பாரிய 4,000 mAH மின்கலமானது, தொலைபேசிக்கு அதன் தேவைக்கு ஏற்றாற்போல் கேம்களை விளையாடுவது, உயர்தர வீடியோக்களைப் பார்ப்பது, இணைய உலாவல் போன்ற தேவைகளுக்கு ஏற்றாற் போல் சக்தியை வழங்குகிறது. இது 40W Huawei SuperCharge தொழில்நுட்பத்துடன் வருவதோடு, 30 நிமிடங்களுக்குள் மின்கலத்தை 70% வரை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.

Nova 7 SE ஆனது, சிங்கர் பிளஸ், சிங்கர் மெகா காட்சியறைகள் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து ரூ. 64,999 இற்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு, விசேட தவணைத் திட்டங்கள், கடனட்டை/ பற்று அட்டைகள் (credit/debit card) மூலம் செலுத்தும் தெரிவுகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசி வலையமைப்பு வழங்குநர்களிடமிருந்து 100GB இலவச தரவு சலுகை மற்றும் ஒவ்வொரு Nova 7 SE கொள்வனவின் போதும், இலவச பரிசுகளுகம் வழங்கப்படுகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *