HP Printers தற்போது Singer இல் கிடைக்கின்றன

நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளர்களாக விளங்கும் Singer Sri Lanka PLC, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற HP பிரிண்டர் வகைகளை இலங்கை சந்தைக்கு வழங்கும் பொருட்டு, முன்னணி IT Hardware, மென்பொருள் விநியோகஸ்தரும், பிரிண்டிங் தீர்வு வழங்குநருமான Trident Corporation உடன் கைகோர்த்துள்ளது.

இந்த பங்குடமையானது, சிங்கர் இலங்கையின் நாடு பூராகவும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, பிரபலமான HP பிரிண்டர் வரிசையை முதற்தடவையாக Singer Mega, Singer Plus காட்சியறை வலையமைப்பு மூலம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றது.

இரு பங்காளர்களுக்கும் இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற வேளையில் கருத்து தெரிவித்த Singer Sri Lanka PLC இன் தலைமை நிர்வாக அதிகாரி, மஹேஸ் விஜேவர்தன அவர்கள், “HP பிரிண்டர்களை ஒரு பரந்த வாடிக்கையாளர் தளத்துக்கு எடுத்துச் செல்ல உதவுவதன் மூலம் இந்த முன்னோடி கூட்டணியானது Singer மற்றும் Trident Corporation ஆகிய இரு தரப்பினருக்கும் வெற்றிகரமான சூழலை உருவாக்குகின்றது. பல வர்த்தகநாமங்களை வழங்கும் Singer இன் மூலோபாயத்திற்கு இணைவாக, புதிய HP பிரிண்டர்கள் இலகுவில் அணுகக்கூடியவையாகவும், வீட்டுப் பாவனையோ அல்லது அலுவலக பாவனையோ எவற்றுக்குமான நம்பிக்கைக்குரிய உத்தரவாதத்துடனும், பரந்த தீர்வுகளுடனும் வருகின்றன” எனக் குறிப்பிட்டார்.

HP இன் கட்டுப்படியாகும் மற்றும் அனைத்தையும் ஒன்றாக உள்ளடக்கிய பிரிண்டர் தீர்வுகளின் வரிசை மூலம் Singer தனது பிரிண்டர் வரிசையை வலுப்படுத்தியுள்ளது. HP Inc, உலகின் முன்னணி பிரிண்டர் மற்றும் பிரிண்டிங் உபகரணங்களின் தயாரிப்பாளர் என்பதுடன், உலக சந்தையில் 42% பங்கைக் கொண்டுள்ளது.  (முதற் காலாண்டு, 2020). HP பிரிண்டர்கள் உலகளவில் பரந்த அளவில் உபயோகப்படுத்தப்படுவதுடன், அதன் நம்பகத்தன்மை, செயற்றிறன், குறைந்த பராமரிப்புச் செலவு போன்றவற்றிற்கு நன்கு அறியப்பட்டது. உயர்ந்த தரம், மிருதுவான எழுத்துக்கள் மற்றும் மங்கலாகாத படங்கள் முதலியன  HP பிரிண்டர்களின் சிறப்பம்சமாகும். HP பிரிண்டர்களின் வரிசையானது தற்போது Singer விற்பனை வலையமைப்பில் கிடைக்கப்பெறுவதுடன், இது வீடு முதல் அலுவலகப் பாவனை வரையான சகல பிரிண்டிங் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது.

இந்த வரிசையானது, எடை குறைந்த, இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய HP DeskJet 2336 போன்ற ஆரம்ப நிலை வண்ண பிரிண்டர்கள், கம்பியற்ற இணைப்பு மற்றும் ink tank தொழிநுட்பத்தை பயன்படுத்தி அதி வேக பிரிண்டிங், பிரதி எடுத்தல், ஸ்கேனிங் செயற்பாடுகள் போன்றவற்றை செய்யக்கூடிய HP Ink Tank 415 முதலிய நடுத்தர நிலை பிரிண்டர்கள், மொபைல் பிரிண்டிங் வசதி கொண்ட Smart Tank family ஐச் சேர்ந்த HP Smart Tank 515 ஆகிய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிண்டர்களையும் உள்ளடக்குகின்றது. இதற்கும் மேலதிகமாக,  நவீன லேசர் பிரிண்டிங் தொழிநுட்பத்துடன் கூடிய HP Laser 107 போன்ற லேசர் பிரிண்டர்கள் முதலியன தெரிவு செய்து கொள்வதற்கான பரந்த பிரிண்டிங் தீர்வுகளை முழுமையாக்குகின்றன.

HP பிரிண்டர் வரிசையானது தற்போது நாடு முழுவதும் Singer Mega, Singer Plus காட்சியறைகளில் கிடைக்கப்பெறுவதுடன், www.singer.lk எனும் இணையத்தளம் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் கொள்வனவாளர்களுக்கு பிரத்தியேகமான உத்தரவாதம் வழங்கப்படுவதுடன், கிரெடிட்/ டெபிட் அட்டை மூலம் பணம் செலுத்துதல், தவணை முறையிலான கொள்வனவுத் திட்டங்கள் மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகள் முதலிய பிரபலமான சிங்கர் நன்மைகளும் கிடைக்கப்பெறுகின்றன.

Singer (Sri Lanka) PLC நுகர்வோர் சாதன சந்தையில் முன்னணியில் உள்ளதுடன், நாடு முழுவதும் வளர்ந்து வரும் தனது நுகர்வோருக்கு பரந்த அளவிலான உயர்தர உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகநாமங்களை வழங்குவதில் புகழ்பெற்றது. இது 430 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள், 600 க்கும் மேற்பட்ட மின்னணு சாதனங்கள், 1200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சர்வதேச புகழ்பெற்ற வர்த்தக நாமங்களைக் கொண்டுள்ளது

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *