South Asian Business Excellence Awards 2023 விருது விழாவில் மதிப்புமிக்க விருதை பெற்ற DIMO Coastline Pvt Ltd

மாலைதீவில் உள்ள DIMO மற்றும் Coastline Investments ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு உறுதியான கூட்டு முயற்சி நிறுவனமான DIMO Coastline Pvt Ltd நிறுவனத்திற்கு,  அண்மையில் நடந்து முடிந்த தெற்காசிய வணிக விசேடத்துவ விருதுகளின் 7ஆவது பதிப்பில், ‘Best Support Services in the Maritime Industry’ எனும் மதிப்பிற்குரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவின், மாலேயில் உள்ள  ஷங்ரி-லாவின் JEN Maldives Malé இல் நடைபெற்ற இந்நிகழ்வு, கடல்சார் துறையில் DIMO Coastline நிறுவனத்தின் சிறப்பான பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில், பெருநிறுவன பிரிவில் அதன் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதற்கான ஒரு தளமாக அமைந்தது.

DIMO Coastline நிறுவனம், மாலைதீவில் உள்ள விடுதிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு, பொதுப் பொறியியல் சேவைகளை வழங்குதல், கப்பல்களுக்கான நங்கூரமிடல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை அதன் முக்கிய வணிக செயற்பாடுகளாக மேற்கொண்டு வருகின்றது. திலாபுஷி (Thilafushi) தீவில் நிறுவனம் அதன் அதிநவீன கப்பல்துறையை இயக்குவதோடு, இது தரையிறங்கும் கப்பல்களுக்கு சிறந்த நங்கூரமிடல் வசதிகளை வழங்குவதோடு, விசைப் படகுகளின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளை முன்னெடுக்கிறது.

இந்த சர்வதேச அங்கீகாரத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்த, DIMO நிறுவனத்தின் குழும முகாமைத்துவப் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கஹநாத் பண்டிதகே, “கடல் பொறியியலில் சிறந்து விளங்குவதற்கான DIMO Coastline நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை, இந்த கௌரவிப்பு உறுதிப்படுத்துகிறது. எமது கூட்டு முயற்சியின் மூலம் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிக்க உதவுவதில் நாம் பெருமை கொள்கிறோம். இந்த அங்கீகாரம் மாலைதீவில் மாத்திரமன்றி, தெற்காசிய பிராந்தியத்திலும் தனது வர்த்தகத்தை மேம்படுத்த DIMO Coastline நிறுவனத்தை மேலும் வலுவூட்டும்.” என்றார்.

DIMO Coastline வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் தரமான சேவையை வழங்குவதில் கவனம் செலுத்தும் நிறுவனத்தின் பொறியியலாளர்கள், விரிவான சர்வதேச பயிற்சி மற்றும் பிராந்தியத்தில் உள்ள புகழ் பெற்ற கப்பல் தளங்களில் இருந்து பரந்த அனுபவத்தை கொண்டுள்ளனர். 2017 இல் நிறுவப்பட்ட DIMO Coastline Pvt Ltd ஆனது, மாலைதீவில் உள்ள பல்வேறு விடுதிகளுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளதோடு, அதிகரித்து வரும் சுற்றுலாத் தலங்களில் பொதுப் பொறியியல் துறையில் வாய்ப்புகளை பயன்படுத்துகிறது. எதிர்காலத்தில், DIMO Coastline மாலைதீவு சந்தையில் வாயுச் சீராக்கி (AC) வசதி, பல்வேறு வகையான மின்சார சேவைகள் மற்றும் பழுதுபார்ப்புகளை உள்ளடக்கியதாக அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

DIMO Coastline நிறுவனமானது, கடல் மற்றும் பொது பொறியியலில் விரிவான தீர்வுகளுக்கான சிறந்த தெரிவாக விளங்குகின்றது. மேம்பட்ட தொழில்நுட்ப அறிவு மற்றும் சர்வதேச அனுபவத்தின் ஆதரவுடன் பல்வேறு தரப்பட்ட நிபுணர் சேவைகளை நிறுவனம் வழங்குகிறது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *