Mercedes-Benz StarDiscovery+: DIMO வழங்கும் Mercedes-Benz விற்பனைக்கு பிந்திய சேவையின் சிறப்புக்கான மாலை நிகழ்வு

Mercedes-Benz இன் இல்லமான DIMO ஆனது, The Mercedes-Benz StarDiscovery+ எனும் பிரத்தியேக மாலை நேர நிகழ்வொன்றை அண்மையில் நடத்தியிருந்தது. DIMO நிறுவனத்தின் Mercedes-Benz வாடிக்கையாளர்களுக்கு, அதன் மூன்று திசையில் நோக்கிய ‘நட்சத்திர’ சின்னத்திற்கு பின்னால் உள்ள மர்மங்களை, இந்நிகழ்வில் DIMO வெளிக்கொண்டு வந்திருந்தது.

Mercedes-Benz AG பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் தலைமையிலான StarDiscovery+ குழுவினர், அந்தந்த மாதிரிகளுக்கான குறிப்பிட்ட தொழில்நுட்ப ஆலோசனைப் பயணத்தில் பங்கேற்பாளர்களை அழைத்துச் சென்றனர். இந்த ஒப்பிட முடியாத ‘நட்சத்திரங்களுக்கு’ சேவை செய்தல் மற்றும் பராமரித்தல் கலை தொடர்பில், உதவிக்குறிப்புகள் மற்றும் நுண்ணறிவுகளை நிபுணர்கள் விருந்தினர்களுக்கு வழங்கினர். இதன் மூலம், Mercedes-Benz இன் இல்லமான DIMO வழங்கும், Mercedes-Benz விற்பனைக்கு பின்னரான அனுபவ உலகிற்குள் அவர்கள் மூழ்கினர்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *