FACETS Sri Lanka 2024 கண்காட்சியில், பாரம்பரியம் மற்றும் பொறுப்புக்கான பயணத்தை வெளிப்படுத்தும், இலங்கையின் முன்னோடியான Sustainability Pavilion அரங்கு

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) ஏற்பாடு செய்துள்ள ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka 2024 ஆனது, நாட்டின் முதலாவது நிலைபேறானதன்மை அரங்கை காட்சிப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. அது, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை வசீகரிக்கின்றதோடு, அவர்களுக்கு அறிவூட்டுகின்றது. இலங்கை இரத்தினக்கல் தொழிற்துறையின் செழிப்பான வரலாறையும் நெறிமுறையான நடைமுறைகளையும், பொறுப்பான மூலாதாரங்கள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றுக்கான அதன் நவீனத்திற்கான அர்ப்பணிப்பு பற்றிய ஒரு தனித்துவமான பார்வையை வழங்குவதற்காக இந்த அற்புதமான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Sustainability Pavilion அரங்கில், இலங்கை இரத்தினக்கல் தொழிற்துறையின் பரிணாம வளர்ச்சியின் மூலமான ஒரு வரலாற்று பயணத்தை FACETS Sri Lanka 2024 காட்சிப்படுத்துகிறது. இங்கு, தலைமுறை தலைமுறையாக நிகழ்ந்து வரும் மாற்றங்கள் தொடர்பில் விளக்கக் காட்சிகள் மற்றும் அதிநவீன தொடுதிரைகள் மூலம் பார்வையாளர்களுக்கு விளக்கப்படுகின்றது. இத்தொழில்துறையின் அரிய கடந்த காலத்தை அது வெளிச்சம் போட்டுக் காட்டும். இந்த அரங்கானது, நெறிமுறையான மூலாதாரத்தின் முக்கியமான அம்சங்களை ஆராய்வதோடு, சூழலுக்கு குறைந்த தாக்கம் மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு உச்ச நன்மைகளை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் இரத்தினக்கற்கள் எவ்வாறு நுணுக்கமாக பெறப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. நியாயமான வர்த்தக நடைமுறைகள், உற்பத்திச் செயன்முறைகள் மற்றும் பொறுப்பான சுரங்க அணுகுமுறைகளை இது ஆராய்கிறது. சுரங்கத்தினால் ஏற்படும் சூழல் தாக்கங்கள் மற்றும் சுரங்க நிலங்களை அவற்றின் இயற்கையான நிலைமைக்கு மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட பாதுகாப்பு முயற்சிகளையும் அது கோடிட்டுக் காட்டுகிறது.

FACETS Sri Lanka 2024 இன் நிலைபேறானத்தன்மை அரங்கின் தலைவரான ஆர்மில் சமூன் இது தொடர்பான தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட போது, “இலங்கையின் இரத்தினக் கைத்தொழில்துறையின் வளமான வரலாற்றைப் பற்றி பலரும் இன்னும் அறியாமலேயே உள்ளனர். Sustainability Pavilion அரங்கின் பின்புலத்தில் காணப்படும் எண்ணக்கரு யாதெனில், இந்த வரலாற்றைக் அனைவருக்கும் காண்பிப்பதாகும். முக்கியமாக, இதில் உள்ள பொறுப்பான நடைமுறைகள் மற்றும் நிலைபேறானதன்மையை நோக்கிய பயணத்தை வெளிப்படுத்துவதாகும். இரத்தினக்கற்கள், எவ்வாறு பொறுப்புடனும் குறைந்த சூழல் தாக்கத்துடனும் பெறப்படுகின்றன என்பதும், இது எவ்வாறு எமது சமூகத்திற்கு நேரடியான பலன்களைத் தருகிறது என்பதும் இங்கு எமது முக்கிய கவனமாகும். அந்த வகையில், இந்தப் பயணமானது, இத்தொழில்துறையை மட்டுமல்லாது, அது ஆதரிக்கும் சமூகங்களின் வளமான எதிர்காலத்தையும் உள்ளடக்கியுள்ளது.” என்றார்.

இத்தொழில்துறையில் உள்ள, சுரங்கத் தொழிலாளர்கள் முதல் நகை விற்பனையாளர்கள் மற்றும் பட்டைதீட்டுபவர்கள் வரை துடிப்பான சமூகங்கள் தொடர்பிலும் இந்த அரங்கு கவனத்தை ஈர்க்கிறது. இந்தத் தொழிலுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்து, ஒரு தனித்துவமான மற்றும் நிலைபேறான மரபை உருவாக்க, பின்புலத்தில் இருந்து செயற்படும் வீரர்களே இவர்கள். பார்வையாளர்களுக்கு FACETS கண்காட்சியின் நடைமுறைகள் பற்றிய விலைமதிப்பற்ற தகவல்களும் இங்கு வழங்கப்படும். சுரங்கத்திலிருந்து சந்தை வரை இரத்தினக்கல் விநியோகச் சங்கிலியின் நுணுக்கங்களை அது காண்பிக்கும். அத்துடன், பல தசாப்தங்களாக நிலைபேறானதன்மையை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களை அது வெளிப்படுத்தும். இந்த மாற்றத்தை சித்தரிக்கும் விளக்கக் காட்சிகள் மற்றும் திரைகளை இந்த அரங்கு கொண்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு மாறுபட்ட கற்றல் அனுபவத்தில் ஈடுபட உதவுகிறது.

இந்த அரங்கானது, ஆழமான வரலாறு மற்றும் கற்றல் அனுபவத்தை ஏற்படுத்துவதற்கு மேலதிகமாக, இலங்கையிலிருந்து லண்டன் கோபுரம் மற்றும் ஸ்மித்சோனியன் (Smithsonian) போன்ற உலகளாவிய இடங்களுக்கு பயணித்த புகழ்பெற்ற இரத்தினக்கற்களையும் காட்சிப்படுத்துகிறது. இந்த இரத்தினங்கள், உலகின் மிகவும் பிரபலமான நகைகளுடன் தொடர்பைக் கொண்ட பல தலைமுறைகள் மற்றும் கண்டங்கள் வெளிப்படுத்தும் கதைகளை கொண்டுள்ளன. FACETS Sri Lanka 2024 கண்காட்சியானது, Sustainability Pavilion அரங்கை ஆராய்வதற்கும், நெறிமுறை மற்றும் நிலைபேறான இரத்தினக் கைத்தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் இணைவதற்கும், இரத்தினக்கல் ஆர்வலர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் முதல் நிலைபேறான நடைமுறைகள் மற்றும் பொறுப்பான மூலாதாரங்களில் ஆர்வமுள்ளவர்கள் வரை அனைத்து பார்வையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது.

FACETS Sri Lanka 2024 கண்காட்சியில் உள்ள Sustainability Pavilion ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் தொழிற்துறையை வரையறை செய்யும் வளமான வரலாறு, பொறுப்பான நடைமுறைகள் மற்றும் துடிப்பான சமூகங்கள் பற்றி மேலும் அறிய விரும்புவோருக்கு ஒரு விலைமதிப்பற்ற வளமாகும். இந்த அரங்கானது, FACETS Sri Lanka 2024 கண்காட்சியின் நிலைபேறான எதிர்காலத்தைத் தழுவுகின்ற அதே வேளையில், இந்தப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாகும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *