தருஷி கருணாரத்னவின் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டி சாதனையை பாராட்டிய ராஜா ஜுவல்லர்ஸ்

1928 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ராஜா ஜுவல்லர்ஸ், அன்று முதல் தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகின்றது. அந்த வகையில், தங்கப் பதக்கம் வென்ற 19 வயதான இலங்கை தடகள வீராங்கனையான தருஷி கருணாரத்னாவின் சாதனையைக் கொண்டாடுவதன் மூலம் இலங்கை சமூகம் தொடர்பான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை ராஜா ஜுவல்லர்ஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. சீனாவின் ஹாங்சோவில் இடம்பெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி தங்கப் பதக்கம் வென்றார்.

தருஷி கருணாரத்னாவின் இந்த வரலாற்று ரீதியான வெற்றியானது, 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு கிடைக்கும் முதலாவது தடகளப் போட்டி மூலமான தங்கப் பதக்கமாகும். அந்த வகையில், அவரது சிறப்பான திறமைக்கு ஆதரவளித்து, கௌரவிப்பதில் ராஜா ஜுவல்லர்ஸ் மகிழ்ச்சியடைகிறது. இத்தொழில்துறையில் 95 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட, சமூகப் பொறுப்புள்ள ஒரு வர்த்தக நாமம் எனும் வகையில், இலங்கைக்கு கௌரவத்தைக் கொண்டுவருகின்ற தருஷி போன்ற ஆர்வமுள்ள மற்றும் திறமையான இளம் விளையாட்டு வீர, வீராங்கனைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களை வலுவூட்டுவதற்கும் ராஜா ஜுவல்லர்ஸ் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்து வருகின்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னாவுக்கு, தமது ட்விங்கிள் டீன் கலெக்‌ஷன் (Twinkle Teen Collection) இலிருந்து பரிசு ஒன்றையும், பணப் பரிசையும் ராஜா ஜுவல்லர்ஸ் அண்மையில் வழங்கியிருந்தது. இதன்போது, தருஷியின் வெற்றிப் பயணத்தில் அவருடன் உறுதுணையாக இருந்து வரும் அவரது பயிற்றுவிப்பாளர் சுசந்த பெர்னாண்டோ ஆற்றிய முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கும் பாராட்டுத் தொகையாக பணப் பரிசையும் ராஜா ஜுவல்லர்ஸ் வழங்கியது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ராஜா ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அத்துல எலியபுர, “ஒரு உண்மையான இலங்கை வர்த்தக நாமம் எனும் வகையில், இலங்கை சமூகத்தின் எதிர்காலத்திற்கு ஆதரவாக நாம் எப்போதும் உறுதுணையாக இருப்போம். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தருஷியின் வெற்றியானது, எமது நாட்டின் அபாரமான திறமைக்கு ஒரு சான்றாகும். சக இலங்கையர்களின் அபிலாஷைகளை மேம்படுத்துவதிலும் அதனை ஆதரிப்பதிலும் ராஜா ஜுவல்லர்ஸ் உறுதியாக இருந்து வருகிறது. அத்துடன் எமது தடகள சாம்பியன்களை வலுவூட்டி, அவர்களை வைரங்களைப் போல் பிரகாசிக்க அது உதவுகிறது.” என்றார்.

பல தசாப்தங்களாக, உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தனது மாசற்ற கைவினை நகைகளுக்காக ராஜா ஜுவல்லர்ஸ் புகழ் பெற்றுள்ளது. சிறந்த இரத்தினக் கற்கள், சிர்கான்கள், சுத்திகரிக்கப்பட்ட தூய தங்கத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பரந்த அளவிலான நகைகளை நிறுவனம் வழங்கி வருகின்றது. பல ஆண்டுகளாக, தனது வாடிக்கையாளர்களுடன் நீடித்த உறவுகளை உருவாக்கி அத்துடன் நம்பிக்கை, சேவையில் சிறந்து விளங்குதல், தனித்துவமான கைவினை முறையிலான நகைகளை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் ராஜா ஜுவல்லர்ஸ் நிறுவப்பட்டுள்ளது.

ராஜா ஜுவல்லர்ஸின் விரிவான நகைகளின் சேகரிப்புகள் பற்றி அறிந்து கொள்ளவும், மேலதிக தகவலுக்கும், www.rajajewellers.com இணையதளத்தைப் பார்வையிடவும்.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *